திருவள்ளுவர்

திருவள்ளுவர்

Jump to navigationJump to search
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர்சிலை
திருவள்ளுவர்  பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர்.
கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், 
சங்க கால புலவரான ஔவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.
திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை

வாழ்க்கை[தொகு]

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும் மணி மேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வள ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.

சிறப்புப் பெயர்கள்[தொகு]

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில்
திருவள்ளுவரை
  • தேவர்
  • நாயனார்,
  • தெய்வப்புலவர்,
  • செந்நாப்போதர்,
  • பெருநாவலர்,
  • பொய்யில் புலவர்
  • பொய்யாமொழிப் புலவர்
  • மாதானுபங்கி
  • முதற்பாவலர்
என்று பல சிறப்புப்பெயர்களாலும் அழைப்பர்.

புலவர்களின் பாராட்டுகள்

பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.
இவரை,
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
"வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே"
என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

இயற்றிய நூல்கள்

இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை
இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்[2]:
"அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே
யவனிதனில் ஞானவெட்டியருள யானும்
நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத
நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே"
இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் இயற்றியது என தெரிய வருகிறது.
அந்த நூல்களில் முக்கியமானவை:
இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில் பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும் அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்கள் உள்ளன.

திருவள்ளுவரும் சமயமும்

திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.(சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்)[மேற்கோள் தேவை]

திருவள்ளுவரும் சைவமும்

திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.[7] இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.[8] திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும்[9], ஆள்வினையுடைமை[10] எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் திருமகளையும் அவளுடைய மூத்தவளானதவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டுக் குறள்களிலுமே தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

திருவள்ளுவர் கோயில்

திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது.[11] இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.
சான்றுடன் திருவள்ளுவரின் காலம்:
அறை நூற்றாண்டிற்கு முன் வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்தாக தெரிகிறது. சங்க காலங்களில் புலவர்கள் அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே பரிசில் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள் தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க கால புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர் அப்போரில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் அரசர்களே என்றும் ஆயினும் சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனை புகழ்ந்து பாடுகின்றனர். அதாவது இப்போர்கள் அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை என தெளிவாக தெரிகிறது. இவை அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும் மாமூலனார் மௌரியர்களுக்கு மூன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம் மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்.
மாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி ஆரியர்கள் கி.மு 600 வாக்கில் தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது.ஆரியனான விஜயன் என்பவன் பாண்டியன் மகளை திருமணம் செய்த பிறகு கி.மு 543ல் இலங்கையை அடைகிறான்.இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக ஆரியர்கள் கி.மு 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர் திருக்குறளில் 12000 கு மேற்ப்பட்ட தமிழ் சொற்களையும்,50கு குறைவான வடமொழி சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் மறைமலை அடிகள்,மொழி ஞாயிறு தேவநேய பாவானர், பாரதிதாசன் போன்றோர் மேற்க்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர்.தேவநேய பாவானர் 16 (வடமொழி) சொற்கள் இருப்பதாகவும் ,சி.இலக்குவனார் 10கு குறைவாக இருப்பதாக கூறுவதும் கவணிக்கத்தக்கது. மேலும் ரிக் வேதத்தில் இந்திரனை பற்றிய குறிப்பும், ஆரியர்கள் தமிழகம் நுழைந்த பிறகு இந்திரனை பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர் திருக்குறளை ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும்.இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவருகிறது. இதன் மூலம் வள்ளுவர் காலம் குறைந்தது கி.மு 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும்

நினைவுச் சின்னங்கள்

இந்தியாவின் தென் கோடியில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.

Comments

Popular posts from this blog

பாரதிதாசன்

மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார்

திரு. வி. க