திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க. , ( ஆகத்து 26 , 1883 - செப்டம்பர் 17 , 1953 [1] ) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். பொருளடக்கம் 1 வாழ்க்கைச் சுருக்கம் 2 கல்வி 3 தமிழ்க் கல்வி 4 ஆசிரியப் பணி 5 பத்திரிகைப் பணி 6 அரசியல் பணி 7 எழுதிய நூல்கள் 7.1 வாழ்க்கை வரலாறுகள் 7.2 அரசியல் நூல்கள் 7.3 சமய நூல்கள் 7.4 பாடல்கள் 8 பயண இலக்கிய நூல்கள் 9 மேற்கோள்கள் 10 வெளி இணைப்புகள் வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் பு...